அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு புடினோடு மோடி?

0
1054

முக்கிய அரசு நிகழ்ச்சிகளுக்கு தமிழகத்தை தேர்ந்தெடுக்க மோடி முன்வந்துள்ளதால், இப்போது யூகங்களும் வதந்திகளும் இறக்கை கட்டி பறக்கின்றன.
தமிழர் கலைக்கோட்டமான மல்லை கற்கோயிலை காண சீன அதிபருடன் வந்த பிரதமர் மோடி, இப்போது தமிழர் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை பார்க்க ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினுடன் வரப்போவதாக மதுரை மாவட்டத்தில் வதந்தி மையம் கொன்டுள்ளது. அது மாவட்ட ஆட்சியர்ஆலுவலக வளாகத்தையும் சுற்றிச் சுழல்கிறது. அதிகாரிகள் சிலர் இதை ஆமோதிக்கவும் செய்தனர்.
ஆனால், அரசு வட்டாரமோ, ‘இது யூகத் தகவல்’ என்கிறது. சமீப காலமாக தமிழரின் மொழி, இலக்கியம், கலை, பண்பாடு என அனைத்தையும் பாராட்டிப்பேசும் பிரதமர் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டுக்கு வெளிநாட்டு தலைவரோடு வந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை.
ஸ்பெயினுக்கு அடுத்தப்படியாக உலகில் பேசப்படும் இந்த காளை விளையாட்டு, அந்நாட்டின் பூர்வீக மக்களோடு நமக்கிருக்கும் தொடர்புக்கு அசைக்க முடியாத ஆதாரமாக இருக்கிறது. அண்மையில் ஸ்பானிய மொழியை ஆராய்ந்த அறிஞர்கள் தமிழின் வேர்ச்சொற்கள் பல அம்மொழியில் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தியா என்ற துணைக்கண்டத்துக்கு தமிழர் என்கிற இனத்தால் வழங்கப்பட்டுள்ள பண்பாட்டு கொடைகள், அடையாளங்கள் ஏராளம் என்றாலும், அதற்கான அங்கீகாரம் இப்போதுதான் கொஞ்சமாக கிடைத்துள்ளது. ஜல்லிக்கட்டுக்கு வந்து பண்டைய மனித இனத்தின் பாரம்பரிய பண்பாட்டை உலக்குக்கு மோடியும் புடிமும் பறைசாற்றினால் அது வரலாற்றுக்கு அவர்கள் செலுத்தும் பரிவட்ட மரியாதையாக இருக்கும் என்கின்றனர் தமிழறிஞர்கள்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here