சிலை கடத்தல் தடுப்பு போலீஸ் என்று கூறி வாலிபரை கடத்தியவர்களுக்கு வலை

0
465

கோவை ரத்தினபுரி கந்தசாமி கவுண்டர் வீதி பகுதியைச் சேர்ந்த மாடசாமி என்பவரின் மகன் சங்கர். இவர் எலக்ட்ரிகல் காண்ட்ராக்ட் தொழில் வேலை செய்து வருகிறார். இவரிடம் திருச்சி மணப்பாறை பகுதியை சேர்ந்த நரசிம்ம ராஜ் என்பவர் கடந்த 4 ஆண்டுகளாக வேலை செய்து வருகிறார். நரசிம்ம ராஜ்  கணபதி அடுத்த ஆறு புளியமரம் ராஜீவ்காந்தி சாலை பகுதியில் வசித்து வருகிறார். நரசிம்ம ராஜுக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை.  சங்கரும் நரசிம்ம ராஜும் ஆன்மீக ரீதியாக சதுரகிரி, வெள்ளிங்கிரி உட்பட சிவத்தலங்களுக்கு சென்று சாமி தரிசனம் செய்து வருவது வழக்கம். அப்படி அவர்கள் சென்று வரும் பொழுது சூலூர் காசி கவுண்டன் புதூரில் வசித்து வரும் முருகன் என்பவர் இவருக்கு நண்பரானார்.

இந்நிலையில் நரசிம்மராஜிடம்  முருகன் சுமார் ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கிடையே நரசிம்ம ராஜ் தனது சொந்த ஊரான மணப்பாறையில் சொந்தமாக புதிதாக கோயில்  கட்டும் பணியில் ஈடுபட்டு வந்தார். அதற்காக சிலைகள் செய்து தருவதற்காக முருகனை நரசிம்மராஜ் சந்தித்துள்ளார். அப்போது நரசிம்ம ராஜிடம்  4 சிலைகளுக்கு நாற்பத்தி ஐந்தாயரம் ரூபாய் செலவாகும் என்று முருகன் கூறியுள்ளார். இதை அடுத்து நான்கு சிலைகளை நரசிம்ம ராஜிக்கு முருகன்  தயார் செய்து கொடுத்துள்ளார். அந்த சிலைகளை நரசிம்ம ராஜ் எடுத்துச் சென்று சொந்த ஊரில் கோயில் கட்டும் பணிகளில் வைத்துள்ளார்.

சிலைக்கு உரிய 45 ஆயிரம் ரூபாய் பணத்தை கடந்த ஒரு வாரமாக முருகன் கேட்டு வந்துள்ளார். அதற்கு நரசிம்ம ராஜ் தனக்கு தரவேண்டிய ஒரு லட்சத்து ஐம்பதாயிரம் ரூபாய் பணத்தில் இருந்து இந்த பணத்தை கழித்துக் கொள்ளுமாறு கூறியுள்ளார். இந்நிலையில் நேற்று சங்கர் முருகன் வீட்டிற்கு சென்றிருந்தார். இருவரும் புறப்பட தயாரான சமயத்தில் முருகன் மற்றும் நான்கு நபர்கள் அங்கு வந்தனர் .மேலும் தாங்கள் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸார் என்று கூறி நரசிம்மராஜை வலுக்கட்டாயமாக காரில் தூக்கி சென்றனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சங்கர் சரவணம்பட்டி போலீசில் புகார் அளித்தார். புகாரின் பெயரில் சரவணம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து கடத்திச் செல்லப்பட்ட நரசிம்மராஜை தேடிவருகின்றனர் .மேலும் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் என்று கூறி நரசிம்மராவை கடத்தி சென்ற நபர்கள் யார் என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here