தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவந்தவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் நாளை அனுசரிக்கப்படுகிறது.
தொடக்கம் முதலே நினைவு நாள் நிகழ்ச்சிக்கு காவல்துறை கடும் கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. தற்போதும் தூத்துக்குடி மாவட்டத்தில் கூடுதலாக வெளிமாவட்ட காவலர்கள் குவிக்கப்பட்டுள்ளனர்.
காவல்துறை சார்பில் , ‘ஸ்டெர்லைட் எதிர்ப்பு போராட்டத்தில் உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவதற்கு அவர்களது குடும்பத்தினருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அரசியல் கட்சிகள் அமைப்புகளை சார்ந்தவர்கள் யாரும் இந்த நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளக்கூடாது’ தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி தூத்துக்குடியில் 56 மதுபான சில்லறை விற்பனைக்கடைகள் நாளை மூடப்படுவதாகவும் டாஸ்மாக் மாவட்ட மேலாளர் தெரிவித்துள்ளார்.








