இடைத்தேர்தல் களத்திலிருந்து அந்நிய மாவட்ட ஆசாமிகளை அகலுமாறு நேற்று முன்தினமே உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நிலையில், இன்னமும் சில இடங்களில் இருந்து அவர்கள் புறபப்டவில்லை எனத்தெரிகிறது.
நாங்குநேரி அருகே உள்ள பட்டர்பிள்ளை புதூரில் ராமநாதபுரத்தை சேர்ந்தவர் ஒருவர் தேர்தல் பறக்கும் படையிடம் சிக்கியுள்ளார். அவரிடமிருந்து சில லட்ச ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நாங்குநேரி தாலுகா அலுவலகத்திற்கு கொண்டுசென்று அவரிடம் விசாரணை நடக்கிறது.










