மெக்சிகோ தீவிபத்தில் 23 பேர் பலி

0
595

மெக்சிகோவில் உள்ள வெராக்ரூஸ் மாநிலத்தின் வளைகுடா கடற்கரை நகரமான கோட்ஸாகோல்கோஸில், ஒரு பாரில் நடந்த தீவிபத்தில் 23 பேர் பலியாகினர். மேலும் 13 பேர் படுகாயமடைந்தனர்.

தீவிபத்து நடைபெற்ற எல் கபாலோ பிலாங்கோ என்ற பாரில் கிடைத்த சாட்சிகளின் அடிப்படையில், பெட்ரோல் வெடிகுண்டுகள் வீசி தாக்குதல் துவங்கப்பட்டிருப்பதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

கிரிமினல் வழக்கில் தொடர்புடைய கும்பல்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலால் இந்த விபத்து ஏற்பட்டதாக அந்த மாநிலத்தின் கவர்னர் கார்சியா தெரிவித்துள்ளார். “கிரிமினல் கும்பல்களின் குற்றங்கள் இனி பொறுத்துக் கொள்ள முடியாது” என்று அவர் குறிப்பிட்டார். இந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here