நாங்குநேரி சட்டமன்ற தொகுதிக்கான இடைத் தேர்தல் பலத்த போலீஸ் காவலுடன் நடை பெறுகிறது. இந்நிலையில் அடுத்த மாவட்டத்துக்காரரான வசந்தகுமார் முன்னாள் எம்எல்ஏ என்ற கோதாவில் தொகுதியில் வாக்குப்பதிவு நடக்கும் பகுதிக்கு செல்ல முயன்றார். தேர்தல் விதிமுறைக்கு புறம்பாக தொகுதிக்குட்பட்ட கலுங்கடிக்கு செல்ல முயன்றவரை நாங்குநேரி காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.விசாரணைக்காக காவல் நிலையம் அழைத்து சென்றனர். இதனால் அங்கு மிகுந்த பரபரப்பு ஏற்பட்டது