கர்நாடக சட்டமன்ற இடைத்தேர்தலில் தனித்து போட்டி: குமாரசாமி

0
507

கர்நாடகாவில் காலியாக உள்ள 17 தொகுதிகளில் ராணி பெண்ணூரு, காகவாடா ஆகிய இரு தொகுதிகளில் தேர்தல் நடத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகள் நிலுவையில் உள்ளதால் 15 தொகுதிகளுக்கு வருகிற அக்டோபர் 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்தநிலையில் இடைத்தேர்தல் தொடர்பாக முன்னாள் முதல் மந்திரியும் மதச்சார்பற்ற ஜனதாதள கட்சியின் மூத்த தலைவருமான குமாரசாமி ஏ.என்.ஐ செய்தி நிறுவனத்திற்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- ‘தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவதே எங்கள் இலக்கு. 15 தொகுதிகளிலும் உள்ளூர் வேட்பாளர்களை நிறுத்தத் திட்டமிட்டுள்ளோம். விரைவில் வேட்பாளர் பட்டியலை வெளியிடுவோம்” என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here