தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் மத்திய அரசு இயற்றிய முப்பெரும் சட்டங்களை திரும்பப் பெறக் கோரியும் வழக்கறிஞர்கள் பாதுகாப்பு சட்டத்தை உடனே நிறைவேற்ற கோரியும் ஒரு நாள் நீதிமன்ற புறக்கணிப்பு மற்றும் மனித சங்கிலி போராட்டமும் நடைபெற்றது. இதில் வழக்கறிஞர் சங்க நிர்வாகிகள் மற்றும் சக வழக்கறிஞர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.









