மதுரை எஸ்.எஸ். காலனி அருகே உள்ள ஜானகி நாராயணன் தெருவில் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர்
சண்முகவேல். இவர் ஒரு ஹோட்டலில் மேலாளராக பணியாற்றி ஓய்வு பெற்றவர்.
தனது மனைவி மாலதி ( 56) மற்றும் இரு மகன்களுடன் வசித்து வந்தார். கடந்த 7 ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக மாலதி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, அவரது உடலை அடுக்குமாடி குடியிருப்பில் மூன்றாவது மாடியில் உள்ள இவரது வீட்டிற்கு எடுத்து வந்துள்ளனர்.

ஆனால் கடந்த மூன்று நாட்களாக உடலை எடுக்காததால், அடுக்குமாடி இருப்பவர்களும் அக்கம் பக்கத்தினரும் மதுரை எஸ். எஸ். காலனி காவல் நிலையத்திற்கு தகவல் அளித்தனர். அங்கு சென்ற காவலர்கள் உடலை எடுத்துச் செல்லும்படி கேட்டுக் கொண்ட பொழுது, சண்முகவேல்’ தற்கொலை செய்து கொள்வேன்’ என மிரட்டல் விடுத்தார்.
போலீசாரின் அறிவுறுத்தலை தொடர்ந்து அவரின் உறவினர்கள் வீட்டிற்கு வந்து இறுதிச் சடங்கு செய்ய திருநெல்வேலிக்கு உடலை எடுத்துச் சென்றனர். மாநகராட்சி பணியாளர்கள் அடுக்குமாடி குடியிருப்பு மற்றும் அப்பகுதி முழுவதும் திரும்பி நாசினி கொண்டு சுத்தப்படுத்தினர்.