கல்வியில் தனக்குள்ள பொறுப்பை தட்டிக்கழிக்கவும், தனியார் மயமாக்கவும் உரிய வகையில் அரசு கல்வி கொள்கைகளை வகுத்து வருகிறது என கல்வியாளர்கள் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வருகின்றனர்.
அதை உறுதிப்படுத்துவதுபோல், தற்போது தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அறிக்கையொன்று வெளியிட்டுள்ளார்.
அதில், ‘ அரசு பள்ளிகளில் தனியார் தொண்டு நிறுவனங்களை அனுமதிக்கலாம். பாட வேளை, தேர்வுக்காலம் பாதிக்காத வகையில் தன்னார்வலர்களை அனுமதிக்கலாம்’ என கூறப்பட்டுள்ளது.
ஏற்கனவே, தனியார் பயிற்சிநிறுவனங்களை கல்வித்துறையில் களமிறக்கி விட்டுள்ள நிலையில், இது தனியார் மயத்துக்கான அடுத்த படி என கல்வியாளர்கள் விமர்சிக்கின்றனர்.