பதற்றம் அளிக்காத கல்வி தேவை: லதா ரஜினிகாந்த் 

0
1078

ரஜினிகாந்த் மனைவி லதா ஆஸ்ரம் என்னும் பள்ளியை நடத்திவருபவர். எனவே, கல்வி தொடர்பான கருத்து அவரிடம் உண்டு.
இன்று சென்னை அபிராமிபுரத்தில் தனியார் பள்ளி ஒன்றை லதா ரஜினிகாந்த் தொடங்கி வைத்தார். பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், 8 வயது வரை குழந்தைகள் மனோபலத்துடன் வளரவேண்டும். எனவே, அவர்களுக்கு உணர்வு ரீதியாக சரியான கல்வி வழங்கப்படவேண்டும். மனப்பதற்றம் அளிக்காத, போட்டியற்ற கல்வியை அமைதியான முறையில் அளிப்பது இன்றைய காலகட்டத்தில் அவசியம். மாணவர்கள்  விரும்பும் முறையிலான கல்வியை அவர்களுக்கு கற்றுத்தர வேண்டியது பள்ளிகளின் கடமை’ என தெரிவித்தார்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here