ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐ விசாரணைக்காக ஏற்கனவே 50 நாட்கள் சிதம்பரத்தை காவலில் வைத்துள்ளனர். இந்நிலையில், இதே வழக்கில் அமலாக்கத்துறை அவரை விசாரிக்க கோரியது.
இதை டெல்லி சிபிஐ சிறப்பு நீதிமன்றம் இன்று ஏற்றுக்கொண்டது. நீதிமன்ற வளாகத்தில் 39 நிமிடம் விசாரிக்க அனுமதி கொடுத்த நிலையில், அவரை சிறையில் வைத்து விசாரிக்க அமலாக்கத்துறை அனுமதி கேட்டது. நாளை அவ்வாறு விசாரிக்க அனுமதி கிடைத்துள்ளது.
அவவறு விசாரித்தபின்பு அவரை அமலாக்கத்துறையினர் சட்டப்பூர்வ கைது செய்ய வாய்ப்புள்ளது. எனவே, சிதம்பரம் விடுதலை இன்னும் தள்ளிப்போகிறது.














