நாங்குநேரி தொகுதி மூலக்கரைப்பட்டி அருகே உள்ள அம்பலத்தில் பெரியகுளம் திமுக எம்.எல்.ஏ. சரவணகுமார் வீடு எடுத்து தங்கியுள்ளார். அவர் வாக்காளர்களுக்கு பணம் கொடுத்ததாக 20க்கும் மேற்பட்டவர்கள் இன்று வீடு புகுந்து பணத்தை பறிமுதல் செய்தனர். அங்கு நின்றிருந்த இரு கார்களிலும் பணம் இருப்பதாக தேர்தல் அதிகாரிக்கு தெரிவித்தனர்.
இதையடுத்து வருவாய் துறை அதிகாரிகள் வந்து இன்று பிற்பகல் அந்த பகுதிக்கு வந்து பொதுமக்கள் பறித்தபோது சிதறிய ரூ.2,78,000ஐ கைப்பற்றினர். இது தங்கியிருந்தவர்கள் செலவுக்கு வைத்திருந்த பணம். சிலர் அத்துமீறி வீட்டுக்குள் நுழைந்து வன்முªறை செய்துள்ளனர் என நாங்குநேரி ஒன்றிய திமுக செயலாளர் குற்றஞ்சாட்டினார்.
ஆனால், அங்கு சுழியிடப்பட்ட வாக்காளர் பட்டியல் கைப்பற்றப்பட்டன. எனவே, பண விநியோகத்துக்கான முன்முயற்சியாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஏற்கனவே நாங்குநேரி தொகுதியில் முதல் சுற்று பண விநியோகம் ஏறத்தாழ முடிந்துவிட்டது. ஆயிரம், இரண்டாயிரம் என ஏட்டிக்கு போட்டியாக பணம் பட்டுவாடா செய்யப்பட்டது. இதுவரை ஒருவரை ஒருவர் காட்டிக்கொடுக்காமல் உத்தமமாக நடந்துகொண்டனர்.
ஆனால், அம்பலத்தில் அதிரடி சம்பவம் நடந்ததற்கு தேர்தல் புறக்கணிப்பு செய்துவருவோர் அளித்த தகவலே காரணம் என கூறப்படுகிறது.














