கனிமொழிக்கு எதிரான தேர்தல் வழக்கு வாபஸ்: தமிழிசை

0
1183

தூத்துக்குடி பாராளுமன்ற தொகுதியில் கனிமொழியை எதிர்த்து பாஜக சார்பில் தமிழிசை சவுந்தரராஜன் போட்டியிட்டார். இந்த தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட்ட கனிமொழி வெற்றி பெற்றார். கனிமொழி வெற்றி பெற்றதை எதிர்த்து சென்னை ஐகோர்ட்டில் தற்போது தெலுங்கானா ஆளுநராக உள்ள தமிழிசை சவுந்தரராஜன் மனு தாக்கல் செய்து இருந்தார்.

கனிமொழியின் வேட்பு மனுவில் குளறுபடிகள் இருந்ததாகவும் அதனை சுட்டிக்காட்டிய பின்னரும் கூட தேர்தல் அதிகாரிகள் பரிசீலனை செய்யவில்லை என்று தனது மனுவில் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்து இருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நிலுவையில் உள்ள நிலையில், வழக்கை வாபஸ் பெறுவதாக தமிழிசை சவுந்தரராஜன் சென்னை ஐகோர்ட்டில் தெரிவித்துள்ளார். ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளதால், வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என்று தமிழிசை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மனு குறித்து கருத்து தெரிவிக்க ஏதுவாக, உரிய நோட்டீசை அரசிதழில் வெளியிட உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட், மனு மீதான விசாரணையை அக்டோபர் 14-க்கு தள்ளிவைத்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here