சென்னை மயிலாப்பூரில் நிகழ்ச்சியொன்றில் பேசிய முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி செல்லமேஸ்வர் சர்வாதிகார ஆட்சிக்கு விளக்கம் அளித்தார்.
‘ எந்த நாடு சரியான நீதி வழங்கவில்லையோ, அந்த நாட்டின் ஆட்சியாளர் சர்வாதிகாரியாக கருதப்படுவார். நீதித்துறையை கட்டுக்குள் வைக்க எப்போதும் அரசுகள் முயற்சி செய்கின்றன.
நீதியை நீதித்துறையை சேர்ந்தவர்கள்தாம் பாதுகாக்க வேண்டும் என்பதில்லை. பொதுமக்களும் போராடவேண்டும்’ என்றார் அவர்.
2018ம் ஆண்டு ஜனவரி 12ம் தேதி உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவின் செயல்பாடுகளுக்கு எதிரான முக்கிய கேள்விகளை செய்தியாளர்கள் சந்திப்பில் எழுப்பியவர் செல்லமேஸ்வர். அந்த செய்தியாளர் சந்திப்பில் நீதிபதிகள், மதன் லோகூர் மற்றும் குரியன் ஜோசஃப் ஆகியோரோடு இப்போதைய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாயும் பங்கேற்றிருந்தார்.













