டாட்டா மோட்டார்ஸ் விற்பனை 39{7a0882499a9dac11d1a5e618ecfeec8f2b279bdf1fc3589101913219fc8b42ec} சரிவு

0
918

டாட்டா மோட்டார்ஸ் நிறுவனம், நடப்பு நிதி ஆண்டின் முதல் 5 மாதங்களில் (2019 ஏப்ரல்-ஆகஸ்டு) மொத்தம் 60,093 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆண்டின் இதே காலத்தில் அது 98,702-ஆக இருந்தது. ஆக, விற்பனை 39 சதவீதம் சரிவடைந்துள்ளது.

இந்நிறுவனம், ஆகஸ்டு மாதத்தில் மட்டும் உள்நாட்டில் மொத்தம் 7,316 வாகனங்களை விற்பனை செய்து இருக்கிறது. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதத்தில் அது 17,351-ஆக இருந்தது. ஆக, விற்பனை 58 சதவீதம் சரிவடைந்துள்ளது.

கடந்த ஆகஸ்டு மாதத்தில், சர்வதேச அளவில் ஜகுவார்-லேண்டு ரோவர் சொகுசு கார்கள் உள்பட மொத்தம் 72,464 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. சென்ற ஆகஸ்டுடன் ஒப்பிடும்போது இது  32 சதவீதம் குறைவாகும்.

மும்பை பங்குச்சந்தையில், திங்கள்கிழமை அன்று வர்த்தகம் தொடங்கியபோது டாட்டா மோட்டார்ஸ் நிறுவனப் பங்கு ரூ.128.20-க்கு கைமாறியது. வர்த்தகத்தின் இடையே அதிகபட்சமாக ரூ.130.35-க்கும், குறைந்தபட்சமாக ரூ.126.70-க்கும் சென்றது. இறுதியில் ரூ.128.55-ல் நிலைகொண்டது. இது, சென்ற வார இறுதி நிலவரத்துடன் ஒப்பிடும்போது 0.77 சதவீத சரிவாகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here