மெய்ஞானபுரம் அருகே உள்ள தைகாவூர் பகுதியில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கோவில் கும்பாபிஷேக விழா நடந்தது. இந்த விழாவில் சாமி கும்பிடுவது போல வந்த இரு இளம் பெண்கள் அதே ஊரை சேர்ந்த சரோஜா (61) என்பவர் அணிந்திருந்த 11 பவுன் தாலி செயினை பறித்து சென்றனர். இது குறித்து விசாரணை நடத்திய போலீசார் திருட்டில் ஈடுபட்ட வள்ளி (24) வைத்தீஸ்வரி (30) ஆகிய இருவரை கைது செய்து செயினை பறிமுதல் செய்தனர்.









