மோடி பற்றி ஜோதிடம் கூறியவர் கைது

0
847

அசாம் மாநிலம் போர்பாக் பகுதியை சேர்ந்தவர் கிஷோர் சர்மா (வயது 35) இவர் எதிர்காலத்தில் நடக்கும் சம்பவங்களை ஜோதிடமாக கணித்து இணையதளங்களில் வெளியிடுவது வழக்கம். இவ்வாறு அவர் பிரதமர் மோடி, அசாம் மாநிலம் நிதி மந்திரி ஹிமானந்த பிஸ்வா சர்மா ஆகியோரை பற்றி பேஸ்புக் இணையதளத்தில் ஜோதிடம் கூறியிருந்தார்.

அதில் 2021 சட்டசபை தேர்தலில் கவுகாத்தியில் பிரதமர் மோடி பிரசாரம் செய்யும்போது பயங்கரவாதிகள் தாக்குதல் நடைபெறும் என்றும் கூறியிருந்தார். மேலும், சட்டசபை தேர்தலில் பிரச்சாரத்தின் போது மாநில மந்திரி ஹிமானந்த பிஸ்வா சர்மா கொலை செய்யப்படுவார் என்று கூறியிருந்தார்.

இது பற்றிய தகவல் போலீஸ் கவனத்திற்கு வந்தது. இதனையடுத்து கிஷோர் சர்மா மீது வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here