காங்கிரஸ் தலைமை குழப்பத்துக்கு பிறகு அந்த கட்சிக்கு புதிய வரவு எதுவும் இல்லை. தேர்தல் தோல்வி வேறு பலரை சிந்திக்கவைத்துவிட்டது.
இந்நிலையில், காங்கிரசிலிருந்து பிரபல நடிகை விஜயசாந்தியும், முன்னாள் கிரிக்கெட் வீரர் அசாருதீனும் விலகுகின்றனர். விஜயசாந்தி பாஜகவிலும், அசாருதீன் தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியுலும் இணைய உள்ளனராம்.
2014ல் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதியிலிருந்து விலகி காங்கிரசில் சேர்ந்த உடனேயே விஜயசாந்திக்கு காங். சீட் கொடுத்து கவுரவித்தது. தெலுங்கானா மேடக் தொகுதியில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இதனால் அவர் அப்செட் ஆனார்.
அதேபோல் அசாருதீனும் கடந்த 2014 தேர்தலில் ராஜஸ்தான் மாநிலம் டோங்க் மதப்பூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அவரும் அதுமுதல் வருத்தத்தில் இருந்தார்.
அவருக்கு ஆறுதல் அளிப்பதுபோல் ல் நடந்த ஐதராபாத் கிரிக்கெட் சங்க தலைவர் தேர்தலில் அசாருதீன் வெற்றி பெற்றார். வெற்றிக்கு ஆளும் தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆதரவு காரணம் என கூறப்படுகிறது. அதற்கு நன்றி நவிலும் விதமாக தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியில் சேர, அசாருதீன் முடிவு செய்துள்ளார்.