தமிழக அரசியலில் அதிமுக ஆட்சியை கலைப்பதற்கான பல்வேறு பொன்னான தருணங்களை ஸ்டாலின் தவறவிட்டதாக அரசியல் நோக்கர்கள் அவரை குறை கூறுவதுண்டு. இதனால் ஆளுங்கட்சியினருக்கும் அவர் மீது குளிர்விட்டுப் போய்விட்டது. வடிவேலு காமெடி சீன் டயலாக் சொல்லி அவரை கலாய்க்கும் அளவு நிலைமை போய்விட்டது.
நாங்குநேரி தொகுதியில் பிரசாரம் செய்த ஈபிஎஸ் முதன்முறையாக ‘ அவரு இதுக்கெல்லாம் சரிப்பட்டு வர மாட்டாரு’ என்று ஸ்டாலினை நக்கலடித்தார். இப்போது விக்கிரவாண்டியில் ஓபிஎஸ், வடிவேல் டயலாக்கை அப்படியே சொல்லி ஸ்டாலினை வாரிவிட்டுள்ளார்.
இந்த இடைத்தேர்தல் முடிவிலாவது அதிரடி நடவடிக்கைகளில் இறங்கி முக ஸ்டாலின் தனது அரசியல் ஆளுமையை நிரூபிக்கவேண்டும். இல்லையேல் எல்லோருக்கும் இளக்காரமாகிவிடும் என அவரது ஆதரவாளர்களே ஆதங்கப்படுகின்றனர்.















