பெண் பத்திரிகையாளர்களை இழிவுபடுத்தி பேசிய எஸ்வி சேகரை எதிர்த்து நெல்லை பத்திரிகையாளர் மன்ற தலைவர் அய்கோ நெல்லை மாவட்ட நடுவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். ஆனால், விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு எஸ்வி சேகர் சார்பில் உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டது. அதன் அடிப்படையில் விசாரணைக்கு ஆஜராவதில் இருந்து அவருக்கு விலக்கு அளிக்கப்பட்டது.
இந்நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்யக்கோரி எஸ்வி சேகர், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத்தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி நிஷா பானு முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது. எஸ்வி சேகர் சார்பில் வக்கீல் ஜெய ருத்ரனும், அய்கோ சார்பில் வக்கீல் சீனி அம்மா சமீரும் வாதாடினர்.
இறுதியில், வழக்கை தள்ளுபடி செய்ய முடியாதென்று கூறி, விசாரணையை ஒரு வாரத்துக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.













