சிவாஜி பிறந்தநாள்: கொண்டாட மறந்த நடிகர் சங்கம்

0
1187

சிவாஜி பிறந்த நாளை கொண்டாடாததற்கு தென்னிந்திய திரைப்பட நடிகர் சங்கத்துக்கு சிவாஜி சமூக நலப்பேரவை கண்டம தெரிவித்துள்ளது.
தென்னிந்திய நடிகர் சங்கத்துக்கு மட்டும் சிவாஜி பிறந்த நாளை கொண்டாட நேரமில்லை. பெயருக்கு இருவரை அனுப்பி மாலை அணிவித்தால் கொண்டாடுவதாகுமா? தென்னிந்திய நடிகர் சங்கம் என்பதை தமிழ் நடிகர் சங்கம் என மாற்றினால் கொண்டாடுவார்களா? ’ என அந்த அமைப்பு கேள்வி எழுப்பியுள்ளது.
இந்தியாவின் மார்லன் பிராண்டோவாக நடிப்பில் தனி முத்திரை பதித்து, பத்ம விருது, செவாலியே விருது, தாதா பால்கே விருது என பல மதிப்புமிக்க விருதுகளை பெற்ற நடிகர் திகலத்தின் பிறந்த நாளை நடிகர் சங்கம் கொண்டாடாதது ஒட்டுமொத்த தமிழக மக்களுக்கே வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here