கடந்த சில ஆண்டுகளாக ஸ்டாலின் மேடை பிரச்சாரத்தையே நம்பி வருகிறார் . தெருவோர டீக்கடைகளில் தேனீர் குடிக்கிறார்.இன்று நாங்குநேரி தொகுதி முன்னீர் பள்ளத்தில் திண்ணை பிரச்சாரத்திற்கு செல்லும் வழியில் சாலையோர டீக்கடையில் ஸ்டாலின் டீ குடித்தார். பின்பு அங்கிருந்த வியாபாரிகளிடம் வாக்கு கேட்டார். தொடர்ந்து சுமார் 300மீட்டர் தூரம் நடந்தே சென்றார். அடுத்து தருவை கூட்டத்திற்கு சென்றபோது, சாலையோரத்தில் இருந்த கடையில் இளநீர் வாங்கி குடித்தார். கடைக்காரர்களிடம் ஸ்டாலின் வாக்கு கேட்டாரா என்று கேட்டால், எங்கள் வாழ்க்கையை கேட்டார் என்று ஸ்டாலினின் தந்தை பாணியில் பதில் கூறினர்.