’நோய்க்குமுன் பயம் கொல்லும், பேய்க்கு முன் பீதி கொல்லும்’ என்பார்கள். கொரோனாவை தொடர்ந்து டெங்கு பயம் தமிழ்நாட்டில் தொற்றிக்கொண்டுள்ளது. தண்ணீர் தேங்கும் இடங்களும், கொசு மொய்க்கும் பகுதிகளும் அந்த பயத்தை அதிகப்படுத்துகின்றன.
ஏரல் அருகே சிறுத்தொண்ட நல்லூர், கொத்தலரி விளை, மொட்டத்தான் விளை, சக்கம்மாள் புரம், திருப்பணி செட்டிக்குளம், ராமசாமியாபுரம், வலசக்காரன் விளை ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் சில இடங்களில் மழைநீர் தேங்கி கிடப்பதால் டெங்கு காய்ச்சல் வருவதாற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. மேலும், வலசக்காரன் விளையில் ’டெங்கு காய்ச்சல் பரவும் பகுதி’ என யாரோ விளம்பரப்பலகையில் எழுதியுள்ளனர். இதனால் இந்த பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
எனவே மாவட்ட சுகாதார பணி இயக்குனர் உடனடியாக தலையிட்டு டெங்கு காய்ச்சல் பரவாமல் தடுக்க வேண்டும் என இப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.









