காஷ்மீரில் கடைகளை திறக்க பயங்கரவாதிகள் எதிர்ப்பு

0
478

ஜம்மு காஷ்மீரில் படிப்படியாக கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது. ஆனால், இயல்பு நிலை திரும்ப விடாமல் தடுக்கும் நோக்கில் பயங்கரவாதிகள் அங்குள்ள மக்களை மிரட்டி வருவதாக தகவல்கள் கூறுகின்றன. மார்க்கெட் பகுதிகளுக்கு சென்று திறந்திருக்கும் கடைகளை மூடுமாறு மிரட்டுவதும், கடை உரிமையாளர்களை கடைகளை இனி திறக்கக்கூடாது என்றும் பயங்கரவாதிகள் மிரட்டி வருவதாக கூறப்படுகிறது.

மேலும், முக்கிய இடங்களில் கைகளால் எழுதப்பட்ட பதாகைகளையும் , டைப் செய்யப்பட்ட போஸ்டர்களையும் அரசுக்கு எதிராக பயங்கரவாதிகள் ஒட்டியுள்ளனர். காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதிகளில் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி நடைபெறுகின்றன. வங்கி ஊழியர்களை வழிமறித்து ஊழியர்கள் பணிக்கு வரக்கூடாது என்று எச்சரிக்கும் காட்சிகளும் காண முடிவதாக பரவலாக செய்திகள் வெளியாகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here