சாத்தை அருகே கிணற்றில் தத்தளித்த ஆடு மற்றும் மாடு மீட்பு

0
339

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் அருகே உள்ள உசரத்துகுடியிருப்பு சவேரியார்புரத்தை சேர்ந்த டேவிட் என்பவரின் பசுமாடு அதே பகுதியில் உள்ள 25 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்தது. இதனைத் தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் அங்கு சென்று கிணற்றில் தத்தளித்த பசுமாட்டை உயிருடன் மீட்டனர்.

ஆடு மீட்பு

கருவேலம்பாடு கிராமத்தைச் சேர்ந்த சுப்புலட்சுமி என்பவருக்கு சொந்தமான ஆட்டுக்குட்டி அதே பகுதியில் உள்ள 50 அடி ஆழ கிணற்றில் தவறி விழுந்து தத்தளித்தது. இதுகுறித்து தகவலின் பெயரில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஆட்டுக்குட்டியை மீட்டு உரியவரிடம் உயிருடன் ஒப்படைத்தனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here