மதுரை கல்பாலத்தில் வைகை நீரை தடுக்கும் ஆகாய தாமரை

0
460

தென் மாவட்ட விவசாயத் தேவைகளுக்காக கடந்த 4 தினங்களுக்கு முன்பு வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தண்ணீரானது நேற்று காலை மதுரை மாநகர் வந்தடைந்தது.

இந்த நிலையில் மதுரை கல் பாலம் அருகே ஆகாயத்தாமரைகள் அதிக அளவில் நிறைந்திருப்பதால் தண்ணீர் செல்ல முடியாமல் அந்த பகுதியில் தேங்கி நிற்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது

தண்ணீர் தேக்கத்தால் அந்த பகுதியில் துர்நாற்றம் வீசும் அவல நிலை உருவாகியுள்ளது. உடனடியாக அதிகாரிகள் ஆகாய தாமரையை அப்புறப்படுத்த வேண்டும், நீர் வரத்தை சரி செய்ய வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here