தூத்துக்குடி மாவட்டம் ஏரல் அருகே உள்ள சேதுக்குவாய்தான் பகுதியை சேர்ந்த அங்குசாமி (78) இவரது மனைவி பொன் மாடத்தி (73) இவர்களுக்கு மூன்று மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். இந்த நிலையில் பொன்மாடத்தி உடல் நலக்குறைவால் இறந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இதுகுறித்து தகவலறிந்த அங்குசாமியும் தகவல் கேட்ட சில மணி நேரத்தில் நெஞ்சு வலியால் உயிரிழந்தார். இந்த சம்பவம் இறப்பிலும் இணை பிரியா ஜோடியால் அப்பகுதியில் சோகம் ஏற்பட்டுள்ளது.









