ஊரடங்கு விடுமுறையில் ஊறல் போட்ட ஆசிரியர் ஒருவர் கைதானார்.
தென்காசி மாவட்டம் தெற்கு சத்திரத்தை சேர்ந்த ஆசிரியர் சிவன் (50)ராயகிரியில் பிச்சாண்டி என்பவர் தோட்டத்தை குத்தகைக்கு எடுத்து விவசாயம் செய்துவந்தார்.
போதை விரும்பியான இவர், ஊரடங்கின்போது நாவறண்டு போனதால் தவித்தார். இவரது நண்பரான தளவாய் புரம் அந்தோணி ராஜும் போதைக்கு அலைந்தார். இருவரும் சேர்ந்து குத்தகைக்கு எடுத்த நிலத்தில் கரும்பு தோட்டத்திற்கிடையே சாராய ஊறல் போட்டு வடித்து குடித்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த தனிப்பிரிவு போலீசார் அதிரடி ரெய்டு நடத்தி ஊறலை கைப்பற்றினர். ஆசிரியரையும் நண்பரையும் கைது செய்தனர்.