தண்ணி வரப்போகுது, கால்வாய் தூர்ந்து கிடக்குது: பெரியாற்றங்கால் பேரவலம்

0
1146

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து பாசன வசதிக்காக நாளை முதல் தண்ணீர் திறக்கப்படுவதையொட்டி பாசன வசதி பெறும் அலங்காநல்லூர் பகுதியில் பிரதான கால்வாய் மற்றும் துணை கால்வாய்களை சுத்தம் செய்யும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். பாசன வசதி பெறும் விவசாயிகளும் ஒருபுறம் துணை கால்வாய்களை சுத்தம் செய்து வருகின்றனர்.

அலங்காநல்லூர் அருகே உள்ள புதுப்பட்டி பகுதியில் பாசன வசதி பெரும் துணை கால்வாய் சீரமைக்கும் பணியில் பொதுப்பணித் துறையினர் ஈடுபட்டுள்ளனர். ஆனால் முறையாக சுத்தம் செய்யப்படவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டியுள்ளனர். கால்வாய்களில் பிளாஸ்டிக் குப்பை உள்ளிட்ட கழிவுகள் தேங்கி கிடப்பதால் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகும் மன வேதனை தெரிவித்தனர்.

பொதுப்பணித்துறையினர் முறையாக சுத்தம் செய்து கால்வாய்களில் தேங்கிக் கிடக்கும் கழிவுநீரை அகற்றுவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here