வேதியியல் பிரிவில் நோபல் பரிசுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட விஞ்ஞானிகள் பெயர் இன்று ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் அறிவிக்கப்பட்டது.
லித்தியம் அயர்ன் பேட்டரிகளை இலகுவானதாகவும், ஆற்றல் மிக்கதாகவும் உருவாக்க ஆய்வு செய்த வகையில் அமெரிக்கவை சேர்ந்த ஜான் குட்னஸ், ஸ்டான்லி லிட்டிங்ஹாம் ஆகியோருக்கும் ஜப்பானை சேர்ந்த அகிரா யோஷினோவுக்கும் நோபல் பரிசு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, மருத்துவம், இயற்பியல் துறைகளை சேர்ந்த அறிஞர்களுக்கும் இவ்வாறு சேர்ந்தாற்போலவே பரிசு வழங்கப்பட்டுள்ளது.