கோடங்கிபட்டியை சேர்ந்த சுந்தர் என்பவர் தனது வீட்டில் கால் மேல் காலைப்போட்டவாறு பாட்டு கேட்டுக்கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக குடிபோதையில் வந்த கண்னன் என்பவர், ‘ தாழ்த்தப்பட்டவன் என் முன்னால் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்திருப்பதா? எனக்கேட்டு சுந்தர் தலையில் அரிவாளால் வெட்டினார்.
படுகாயமடைந்த சுந்தர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். பழனிசெட்டிப்பட்டி போலீசார் இதுகுறித்து விசாரித்துவருகின்றனர்.












