மதுரை மாவட்டம் சோழவந்தான் பேட்டை கிராம வீரமாகாளியம்மன் கோயில் மாசி திருவிழா
மார்ச் 8ல் கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது.
ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் இருந்தனர்.
இத்திருவிழாவை முன்னிட்டு தினமும் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்து வழிபாடு செய்தனர்.
அம்மன் வீதி உலா நடைபெற்றது. பக்தர்கள் பூத்தட்டு,பொங்கல் வைத்து வழிபட்டனர்.

வைகை ஆற்றிலிருந்து பக்தர்கள் பால்குடம், அக்னிச்சட்டி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
திருவிளக்கு பூஜை செய்த பெண்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலம் சென்றனர்.












