சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த தஹில் ரமானி மேகாலயா நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டார். ஆனால் இந்த இடமாற்றத்தை தஹில் ரமானி ஏற்க மறுத்து தமது பதவியையும் ராஜினாமா செய்தார்.
மேகாலயா தலைமை நீதிபதி ஏ.கே. மிட்டல் சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்ட நிலையில் திடீரென அவரை மத்திய பிரதேச உயர்நீதிமன்றத்துக்கு இன்று கொலீஜியம் மாற்றியுள்ளது.
மேலும், பாட்னா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி ஏபி ஷாஹியை சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமித்துள்ளது.














