பாகிஸ்தானை சேர்ந்த கமர் மோஷின் ஷேக் என்பவர் இந்தியாவை சேர்ந்தவரை திருமணம் செய்து கொண்டு குஜராத் மாநிலம் ஆமதாபாத்தில் வசித்து வருகிறார்.
திருமணத்திற்கு பின் ஓவியரான அவரது கணவருடன், ஒரு முறை டில்லியில் அப்போது ஆர்எஸ்எஸ் உறுப்பினராக இருந்த, பிரதமர் மோடியை, சந்தித்துள்ளார்.
அது முதல், 20 ஆண்டுகளுக்கும் மேலாக, சகோதரத்துவத்தை வலியுறுத்தும் ‘ரக்ஷா பந்தன்’ பண்டிகையை முன்னிட்டு, மோடிக்கு, ராக்கி கயிறு கட்டுவதை கமர் மோஷின் ஷேக் வழக்கமாக வைத்துள்ளார்.
அது போல், இந்த ஆண்டும் பிரதமர் மோடியை சந்தித்து, ராக்கி கயிறு கட்டியதுடன், ஓவியம் ஒன்றை பரிசாக கொடுத்தார்.














