தேர்தல் நிதி ரூ.25 கோடிக்கு ஸ்டாலின் விளக்கமளிக்க பிரேமலதா வலியுறுத்தல்

0
480

இன்று பழனி மலைக்கோவிலில் சாமி தரிசனம் செய்த  பிரேமலதா விஜயகாந்த் நிருபர்களுக்கு அளித்த பேட்டி, ‘ அதிமுக -தேமுதிக கூட்டணி இடைத்தேர்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல்களிலும் தொடரும். கஷ்டப்படாமல் குறுக்கு வழியில் முன்னேறத் துடிக்கும் எண்ணம் உள்ளவர்களே நீட் தேர்வில் தவறு செய்கிறார்கள். நல்லமுறையில் படித்து மருத்துவராகும் மாணவர்களே சேவை மனப்பான்மையுடன் பணிபுரிவார்கள்.

திமுகவிலிருந்து தேர்தல் நிதியாக கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு 25 கோடிரூபாய் வழங்கியதாக வரும் தகவலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலினும் கம்யூனிஸ்ட் கட்சியினரும் விளக்கம் அளிக்க வேண்டும் எனக் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here