சர்வதேச பரிசான நோபல், இயற்பியல், வேதியல், மருத்துவம், இலக்கியம், உலக அமைதிக்காக வழங்கப்படுகிறது.
இந்தாண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவத்துக்கு மூவருக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இயற்பியலுக்கும் மூவருக்கு இன்று நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. சூரிய குடும்பத்துக்கு வெளியில் உள்ள கோள்களை ஆராய்ந்ததற்காக ஜேம்ஸ் பிபிள்ஸ், மைக்கேல் மேயர், திதியர் கியூவோஸ் ஆகிய மூவர் பரிசு பெறுகின்றனர்.













