திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் திருவண்ணாமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தோக்கவாடி அருகே செய்யாற்றில் கள்ளச்சாராயம் உற்பத்தி செய்வதற்காக உற்பத்தி செய்து வைத்திருந்த 300 லிட்டர் ஊரலை மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு ஆய்வாளர் மலர் தலைமையில் காவலர்கள் முருகானந்தம், சாம்பசிவம், சம்பத் ஆகியோர் அடங்கிய குழுவினர்கள் கண்டறிந்து சம்பவ இடத்திலேயே தரையில் ஊற்றி அழித்தனர்.
கள்ளச்சாராயம் உற்பத்தி செய்வதற்கு பயன்படுத்தப்பட்ட உபகரணங்கள் அனைத்தும் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டார்கள்.















