கோவை சித்தாபுதூர் மாநகராட்சி பள்ளியில் தூய்மை பணியாளர்களுக்கு சான்றிதழ்கள், பாதுகாப்பு உபகரணங்களை தேசிய தூய்மை பணியாளர்கள் ஆணைய குழு தலைவர் வெங்கடேஷ் வழங்கினார்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் தேசிய தூய்மை பணியாளர் ஆணையத்தின் சார்பாக இரண்டு நாள் சுற்றுபயணமாக தமிழகம் வந்து உள்ளேன்.
கோவையில் பணியாளர்கள் பலர் பத்து வருடங்களுக்கு மேலாக மாநகராட்சியில் பணியாற்றிய நிலையில் வைப்புநிதி பிடித்ததாகவும், அதன் நிலை என்ன என்பது தங்களுக்கு தெரியவில்லை எனவும் புகார் தெரிவித்தனர்.இது குறித்து கேட்டபோது மாநகராட்சி ஆணையர் உரிய நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்து உள்ளார்.
தமிழ்நாடு முழுவதும் நிர்ணயிக்கபட்டதற்கு குறைவான ஊதியம் வழங்கபடுவதாகவும், அதிகப்படியான வேலைப் பளு என ஒப்பந்த பணியாளர்கள் பல்வேறு பிரச்சினைகள் எதிர் கொள்வதாகவும் ஒப்பந்த முறை காரணமாக இது நடைபெறுவதால் ஒப்பந்த பணியாளர் முறையை ஒழித்து நிரந்தர பணியாளர் நடைமுறையை தமிழக அரசு நடைமுறைபடுத்த வேண்டும் என்றார்.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு குழு அமைத்து ஒப்பந்த பணியாளர்கள் நிலையை ஆய்வு மேற்கொண்டு தமிழக அரசு ஒரு குழு அமைக்கபட்டால் பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு எட்டபடும் என்றார்.கடந்த அதிமுக ஆட்சியில் நியமிக்கபட்டவர்கள் இப்போது நீக்கபட்டு உள்ளனர் எனவும் இதனால் நதியா என்பவர் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என கூறியவர் இதேபோல் அரசியல் ரீதியாக தமிழகம் பலர் பாதிக்கபட்டு உள்ளனர் என புகார்கள் கிடைக்கபெறுவதாகவும் தெரிவித்தார்.இந்த விவகாரம் தொடர்பாக தமிழக முதல்வர் தலையிட்டு உரிய நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். கட்சியை காரணம் காட்டி பணி நீக்கம் செய்வது சரியானது அல்ல என்றார்.













