சென்னை தண்டையார்பேட்டை டாக்டர் வெங்கடேசனின் மகன் உதித் சூர்யா நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேறி தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்தது தொடர்பான வழக்கு காவல் ஆய்வாளர் உஷாமூலம் விசாரிக்கப்பட்டது.
விசாரணையில் தகுந்த முன்னேற்றம் ஏற்படாத நிலையில் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றபட்டுள்ளது. டிஜிபி திரிபாதி இதற்கான உத்தரவை பிறப்பித்துள்ளார். தேனி மாவட்ட போலீசாரே அதற்கு பரிந்துரைத்ததாக கூறப்படுகிறது.
இன்னமும் ஆள் மாறாட்டம் செய்த மாணவரும் அவரது தந்தையான டாக்டரும் கைது செய்யப்படவில்லை.














