ஏன் அடிக்கடி மாத்துறீங்க…நீதிமன்றம் கண்டனம்

0
837

பார்வையற்றோருக்கான தேசிய சங்கம் ரூபாய் நோட்டுகளின் வடிவம் அடிக்கடி மாற்றப்படுவதை எதிர்த்து மும்பை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளது.

இந்த வழக்கு, தலைமை நீதிபதி, பிரதீப் நந்த்ரஜாக் தலைமையிலான அமர்வு முன், மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, அமர்வு கூறியதாவது:ரூபாய் நோட்டுகளின் வடிவத்தை அடையாளம் காண்பதற்கு, பார்வையற்றவர்களுக்கு அதிக நாட்களாகும்.

அடிக்கடி ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்களின் வடிவத்தை மாற்றி அமைப்பது சரியானதல்ல. இதில், எந்த பிரச்னையையும் மனதில் கொள்ளாமல், அதிகாரம் உள்ளது என்பதற்காக, அடிக்கடி மாற்றலாமா.கள்ள நோட்டு புழக்கத்தை குறைப்பதற்காகவே, இவ்வாறு மாற்றுவதாக கூறுவதை ஏற்க முடியாது எனஅமர்வு கூறியது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here