அம்மனுக்கு ஆண்டாள் அலங்காரம்? அண்ணாமலையார் கோயில் சர்ச்சை

0
1441

மலையே ஜோதி சொரூபமாக, சிவனாக தோன்றும் ஸ்தலமாக திருவண்ணாமலை மதிக்கப்படுகிறது. நவராத்திரி விழா சமயமான தற்போது இங்குள்ள இறைவி உண்னாமுலையம்மனுக்கு செய்த அலங்காரம் சிவாகம விதிமுறைக்கு மாறாக உள்ளதாக சர்ச்சை வெடித்துள்ளது.
அபயஹஸ்தமாக அருள் பாலிக்கும் அம்பாளுக்கு பூவை கொடுத்து, ஆண்டாள் போல அலங்காரம் செய்துள்ளதாக பக்தர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
ஆனால், பல ஆண்டுகளாக இதைப்போன்றும் கஜலட்சுமி போன்றும் அலங்காரம் செய்வதாக பூசகர்கள் கூறியுள்ளனர். அறநிலைய துறை இணை ஆணையர் ஞான சேகரும், ‘ உள்ளேயே பெருமாளுக்கு தனி சன்னதி உள்ள நிலையில் இது தவறல்ல. அரியும் சிவனும் ஒன்றுதானே? ’ என்று சமாதானம் கூறியுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here