மேக்கே தாட்டுவில் அணை கட்ட தமிழக ஒப்புதல் தேவையில்லை என கர்நாடக அரசு மத்திய அரசிடம் தெரிவித்துள்ளது.
காவிரியின் வடிநிலப்பகுதியான தமிழகத்துக்கு வெள்ளம் ஏற்பட்டால் தண்ணீர் விடுவதும், மற்ற நேரங்களில் தவிக்க விடுவதுமாக கர்நாடகா ஆட்டம் காட்டுகிறது.
ஏற்கனவே, அதிக அணை கட்டி தண்ணீரை தடுத்திருக்கும் நிலையில், தமிழக எல்லைக்கு அருகில் மேக்கே தாட்டுவில் ரூ.9 ஆயிரம் கோடி ரூபாயில் அணை கட்டி தண்ணீரை தேக்கவும், மின் உற்பத்தி செய்யவும் திட்டமிட்டு மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் அனுமதிக்காக மதிப்பீடு அனுப்பியது.
தமிழக அரசின் எதிர்ப்பு காரணமாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இதுவரை அனுமதி அளிக்கவில்லை.
இப்போது மறுபடியும் பிரச்சினையை கையில் எடுக்கும் கர்நாடகா, நனையும் ஆட்டுக்கு கண்ணீர் வடிக்கும் ஓநாயாக கருத்து பொழிந்துள்ளது. ‘ தமிழகத்துக்கு தரவேண்டிய 177.25 டி.எம்.சி. தண்ணீரை தேக்கிவைக்க மேக்கே தாட்டுவில் அணை தேவை. அணை கட்ட தமிழக ஒப்புதல் தேவையில்லை’ என தெரிவித்துள்ளது.










