L
மதுரை அண்ணாநகர் சுகுணா ஸ்டோர் அருகே மதுரை மாநகராட்சி உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் மக்கள் நீதி மய்யம் கட்சி வேட்பாளர்களை ஆதரித்து டார்ச் லைட் சின்னத்திற்கு ஓட்டு கேட்டு பேசினார்.
அப்போது,, ‘மக்கள் நீதி மய்யத்தின் வேட்பாளர்களை தேர்வு செய்தால், வெளிப்படையான நிர்வாகம் நடக்கும், தவறு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பேன்.
அரசு சிறப்பாக செயல்பட வேண்டுமானால் பொதுமக்களிடம் விழிப்புணர்வு தேவை. மக்கள் விரும்பும் மாற்றம் ஏற்பட்டால் நாடு முன்னேறும்.
உள்ளாட்சிகளில் மாற்றம் கொண்டு வர அனைத்து வாக்காளர்களும் டார்ச் லைட்டுக்கு வாக்களிக்க வேண்டும் என்று கமல்ஹாசன் கேட்டுக் கொண்டார்.












