பாஜக பிரமுகரின் மாமியாரை கட்டிப்போட்டு நகை திருட்டு

0
361

நெல்லை சுத்தமல்லி பொன்விழா நகரை சேர்ந்தவர் சன்னியாசி(50).இவர் நெல்லை மாவட்ட பாஜக வர்த்தக பிரிவு செயலாளராக உள்ளார். இவர் நெல்லை, சென்னை ஆகிய இடங்களில் பைனான்ஸ் மற்றும் வாடகை கார் வைத்து தொழில் நடத்தி வருகிறார். தற்போது இவர் குடும்பத்துடன் சென்னை சென்றிருந்த நிலையில் வீட்டை பூட்டாமல் பார்த்து கொள்வதற்காக சீவலப்பேரியிலிருந்து தனது மாமனார் மாரியையும்(75),மாமியார் ஆண்டிச்சியையும்(70) வீட்டில் தங்க வைத்திருந்தார்.
இந்நிலையில் மாமனார் மாரிஜனவரி 8 ந்தேதி பிற்பகலில் சீவலப்பேரி ரேஷன் கடையில் பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரூ. 3 ஆயிரம் பரிசுத்தொகை வாங்க சென்று விட்டார். வீட்டில் மூதாட்டி ஆண்டிச்சி மட்டுமே இருந்தார். ஜனவரி 8 பிற்பகலில் 2 வாலிபர்கள் வந்து மூதாட்டியிடம் குடிக்க தண்ணீர் கேட்டனர். அவர் வீட்டுக்குள் சென்றதும் பின்னால் சென்ற இருவரும் வீட்டு கதவை சாத்தி விட்டு அவரை கை, கால்களை கட்டி போட்டு கழுத்தில் கிடந்த 15 பவுன் நகை, வீட்டு பீரோவிலிருந்த 10 பவுன் நகை மற்றும் பணம் ரூ. 6 லட்சம் ஆகியவற்றை கொள்ளையடித்து விட்டு சென்று விட்டனர். சுத்தமல்லி போலீஸ் ஸ்டேஷன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here