பிடிஓ அலுவலகத்தில் புகுந்து ஊழியர் கைப்பை திருட்டு

0
479


,

கோவை  தொண்டாமுத்தூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பணிபுரிபவர் லதா. இவர் கடந்த திங்கட்கிழமை அன்று மதியம்  அலுவலகத்தில்  நடைபெற்ற மீட்டிங்கில் கலந்து கொள்ள அனைத்து ஊழியர்கள் சென்றனர். அவர்களுடன் லதாவும் கலந்து கொண்டார். 

கூட்டம் முடிந்து திரும்பி வந்து தன் இருக்கையில் பார்த்தபோது  வைத்திருந்த கைப்பை காணாமல் போனதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.கைப்பையில் 8500 ரூபாய் பணம் , ஐடி கார்டு, ஏடிஎம் கார்டு போன்றவை இருந்துள்ளது. இதுகுறித்து அலுவலக மேலதிகாரிகளிடம் கூறினார். பின்னர் இது குறித்து லதா தொண்டாமுத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.வழக்கு பதிவு செய்த போலிசார் அங்கு பொருத்தப்பட்டுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி கைப்பையை திருடி சென்ற நபரை  தீவிரமாக தேடி வருகின்றனர். 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here