விளாத்திகுளம் எட்டையாபுரம் சாலையில் அரசு பேருந்து கவிழ்ந்து விபத்து 20 க்கும் மேற்பட்டோர் காயம்.
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையத்திலிருந்து விளாத்திகுளம் நோக்கி சென்ற அரசு பேருந்தை பிள்ளையார் நத்தம் பகுதியைச் சேர்ந்த ஓட்டுனர் செல்வக்குமார், மற்றும் குருவார்பட்டியைச் சேர்ந்த நடத்துனர் கார்த்திக் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட பயணிகளுடன் விளாத்திகுளம் நோக்கி சென்று கொண்டிருந்தது அப்பொழுது கழுகாசலபுரம் அருகே விளக்கில் பயணிகளை இறக்கிவிட்டு தொடர்ந்து சென்று கொண்டிருக்கும் பொழுது கியர் ராடு கட் ஆகி பாலத்தின் மீது மோதி சாலையோரம் இருந்த நீரோடையில் தலை குப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
விபத்து தொடர்பாக எட்டையபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் உடனடியாக காயம் அடைந்தவர்களை கோவில்பட்டி எட்டையாபுரம் பகுதிகளில் இருந்து வரவழைக்கப்பட்ட ஆம்புலன்சில் ஏற்றி சிகிச்சைக்காக கோவில்பட்டி அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 20 க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது இந்த விபத்து தொடர்பாக எட்டயபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் ஓடையில் கவிழ்ந்த அரசு பஸ்








