நடிகர் விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு வெளிநாட்டில் இருந்து ரோல்ஸ் ராய்ஸ் காரை இறக்குமதி செய்திருந்தார்.அதற்கு நுழைவு வரி செலுத்தவில்லை. போக்குவரத்து அலுவலகத்தில் பதியவும் இல்லை.
இந்நிலையில் வணிகவரித்துறை சார்பில் வரி செலுத்துமாறு அவருக்கு நோட்டீஸ் விடப்பட்டது. ஆனால் நடிகர் விஜய் காருக்கு வரிவிலக்கு தருமாறு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இதை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி எஸ் எம் சுப்பிரமணியன்,’ வரி என்பது விரும்பினால் கொடுக்கவேண்டிய நன்கொடை அல்ல, கட்டாயமாக செலுத்தவேண்டிய வேண்டியது ‘என்றும், ‘சமூகநீதிக்கு பாடுபடுவதாக திரையில் பிரதிபலிக்கும் நடிகர்கள் இவ்வாறு செய்வதை ஏற்றுக்கொள்ள முடியாது’என்றும் கூறியதோடு, விஜய்க்கு ஒரு லட்சம் அபராதம் விதித்துதீர்ப்பு அளித்தார். அந்தத் தொகையை தமிழ்நாடு அரசின் கொரோனா நிதிக்கு அனுப்பவேண்டும் என்று உத்தரவிட்டார்.














