தொகுதி மறு வரையறை செய்யாமல் உள்ளாட்சி தேர்தலை நடத்தக்கூடாது என்று கோரிய திமுகவின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் நேற்று விவாதிக்கப்பட்டது.
தேர்தல் நடைமுறை தொடங்கிவிட்டதால் தேர்தலை ரத்து செய்ய முடியாது என வாதிட்ட சூழலில், தேர்தலை ரத்து செய்ய முடியாது, ஆனால், தள்ளிவைக்கலாம் என நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர். பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்ற இடங்களில் தேர்தல் நடத்தலாம் என்ற வாதத்தை தேர்தல் ஆணையம் தரப்பு எடுத்துரைத்தது.
இந்நிலையில், தீர்ப்பை இன்றைக்கு உச்சநீதிமன்றம் தள்ளிவைத்தது. காலை 10. 30க்கு தீர்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. அதன்படியே பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களை தவிர மற்றவற்றில் தேர்தலை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஒத்திவைக்கப்பட்ட 9 மாவட்டங்களிலும் 4 மாதங்களில் தேர்தல் நடத்தவேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.













