நாமக்கல் போதுப்பட்டியில் உள்ள கிரீன்பார்க் மேல்நிலைப்பள்ளி, நீட் பயிற்சி மையம் ஆகிய இடங்களில் சென்னை, கோவையிலிருந்து வந்த வருமான வரி அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
மேலும், பள்ளியின் நிறுவனர் சரவணன் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மதிப்பிற்கதிகமான கட்டணம் வசூலிக்கப்பட்டதால் இந்த வருமான வரி சோதனை நடத்தப்பட்டதாகவும், இதுவரை ரூ.5 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.